மும்பை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி சாய்ரா பானுவுக்கு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து அவரது தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தங்களது 29 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு விடை கொடுத்து பிரிவதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்தனர். அப்போது சாய்ரா பானு ஆடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில் உடல்நலன் சார்ந்து மும்பையில் சிகிச்சையில் உள்ளதாக தெரிவித்திருந்தார்.