சென்னை: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷனின் (ஐஆர்சிடிசி) வலைதளம் தற்காலிகமாக முடங்கிய காரணத்தால் ரயில் பயணிகள் தட்கல் மற்றும் இ-டிக்கெட் எடுக்க முடியாமல் தவித்தனர்.
இதனால் அந்த தளத்தை பயன்படுத்த முயன்ற இணையதள பயனர்களுக்கு ‘திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணி காரணமாக இ-டிக்கெட்டிங் சேவை தற்காலிகமாக பெற முடியாத சூழல் உள்ளது. மீண்டும் பின்னர் முயற்சிக்கவும்’ என்ற மெசேஜ் திரையில் தெரிகிறது. இருப்பினும் இந்த பராமரிப்பு குறித்து ஐஆர்சிடிசி தரப்பில் எந்த அப்டேட்டும் வழங்கப்படவில்லை. அதன் சமூக வலைதள பக்கங்களிலும் இது குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை.