சென்னை: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் சித்தாந்தத்தை ஊக்குவிப்பவர்களை கண்டறியும் நோக்கில் தமிழகத்தில் 16 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) இன்று (ஜன.28) சோதனை நடத்தியது. குறிப்பிட்ட உள்ளீடுகளின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் சித்தாந்தத்தை ஊக்குவிப்பவர்கள், அந்த அமைப்புக்கு ஆட்களைச் சேர்ப்பவர்கள் ஆகியோரை கண்டறிவது மற்றும் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பது ஆகியவற்றில் என்ஐஏ தீவிரமாக செயல்பட்டு வருகிறது.