
துபாய்: மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முடிவடைந்துள்ள நிலையில் பேட்டிங் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட்டிடம் முதலிடத்தை இழந்துள்ளார்.
அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டியில் சதம் விளாசியிருந்த லாரா வோல்வார்ட், உலகக் கோப்பை தொடரில் 571 ரன்களை வேட்டையாடி இருந்தார். இதன் மூலம் அவர், தரவரிசையில் 814 புள்ளிகளுடன் 2 இடங்கள் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார்.

