நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் இந்தியாவின் நிரந்தர தூதுக்குழு சார்பில் சர்வதேச தேநீர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வாழ்வாதாரத்திற்கான தேநீர், நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான தேநீர் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு பிரபலமான டார்ஜிலிங் தேநீர், மசாலா தேநீர், நீலகிரி தேநீர் உள்பட பல்வேறு வகையான தேநீர் வகைகள் பரிமாறப்பட்டது. நிகழ்ச்சியில் ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ், ஐநாவின் எப்ஏஓ இயக்குனர் ஏஞ்சலிகா ஜேகோம், கென்யா, இலங்கை மற்றும் சீனா உட்பட தேயிலை உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டு சிறு தேயிலை விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
The post ஐநாவில் சர்வதேச தேநீர் தினம் appeared first on Dinakaran.