கொல்கத்தா: ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழாவின் 18-வது சீசன் போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் இன்று தொடங்குகிறது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழாவின் 18-வது சீசன் போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் இன்று தொடங்குகிறது. மே 25-ம் தேதி வரை நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் தலா 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 2008-ல் பட்டம் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ், 2016-ல் வாகை சூடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 2022-ல் கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுடன் 17 சீசன்களாக பட்டம் வெல்ல முடியாமல் போராடும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் மற்றும் 3 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமாகி 2 முறை பிளே ஆஃப் சுற்றில் கால்பதித்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பட்டம் வெல்வதற்காக மல்லுக்கட்ட உள்ளன.