இந்திய அணியின் சமீபத்திய தோல்விகளை அடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வீரர்களுக்கு 10 கண்டிஷன்களை விதித்து கெடுபிடியைக் கூட்டியுள்ளது. இந்த புதிய நிபந்தனைகளை மீறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய விதிகளை வீரர்கள் கடைப்பிடிக்காமல் மீறினால் ஐபிஎல் போட்டிகளில் ஆடத் தடை முதல் உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ஆடவும் தடை விதிக்கப்படும் என்று விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.