மும்பை: இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதற்றம் காரணமாக கடந்த 8-ம் தேதி ஐபிஎல் தொடரில் பஞ்சாப் – டெல்லி அணிகள் இடையிலான ஆட்டம் 10.1 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் பாதியில் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒரு வார காலத்துக்கு ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.
இதையடுத்து பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் தாயகம் புறப்பட்டுச் சென்றனர். இந்திய வீரர்களுக்கும் தங்களது சொந்த நகரை அடைந்தனர். இந்நிலையில் 11-ம் தேதி மாலை இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்த அறிவிப்பு வெளியானது. இதையடுத்து ஐபிஎல் போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கான பணிகளை பிசிசிஐ மேற்கொண்டது.