சென்னை: ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை ஒட்டி, பயணிகள் வசதிக்காக, வேளச்சேரி – கடற்கரை இடையே பாசஞ்சர் சிறப்பு ரயில்கள் மார்ச் 23, 28, ஏப்.11, 25, 30, மே 12 ஆகிய 6 நாட்களுக்கு இயக்கப்பட உள்ளது. இலவச பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் மார்ச் 23, 28, ஏப்.11, 25, 30, மே 12 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே 3 பாசஞ்சர் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வேளச்சேரியில் இருந்து இரவு 10.55 மணிக்கு சிறப்பு பாசஞ்சர் சிறப்பு ரயில் புறப்பட்டு, சேப்பாக்கத்தை இரவு 11.25 மணிக்கு அடையும். அங்கிருந்து புறப்பட்டு, நள்ளிரவு 11.45 மணிக்கு சென்னை கடற்கரையை அடையும்.