ஈரோடு: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டி கடந்த 15-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 20 நாடுகளை சேர்ந்த 177 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
10 சுற்றுகளாக நடைபெற்ற இத்தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டர் இனியன் 6 வெற்றி, 3 டிரா, 1 தோல்விகளுடன் 7.5 புள்ளிகளை பெற்று, 3-வது இடம் பிடித்தார். வியட்நாமை சேர்ந்த ங்குயேன் குக் முதலிடமும், பெல்லாரஸின் அலெக்ஸ்யி பெடோரோவ் 2-வது இடமும் பெற்றனர்.