வெளிநாடு வாழ் இந்தியர்களை ஒன்றிணைக்கும் பிரவாசி பாரதிய திவஸ் அமைப்பின் 18-வது மாநாடு 8-ம் தேதி தொடங்கி 10-ம் தேதி வரை ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெறுகிறது.
மத்திய வெளியுறவுத் துறையும் ஒடிசா மாநில அரசும் இணைந்து விமரிசையாக நடத்தும் இந்த மாநாட்டின் பொருள் “வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு புலம்பெயர் இந்தியர்கள் செய்யும் பங்களிப்பு” (Diaspora's Contribution to Viksit Bharat) என்பதாகும்.