இஸ்லாமாபாத்: “சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டால், சிந்து நதியில் இந்தியர்களின் ரத்தம் பாயும்” என பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். பாகிஸ்தானின் சிந்து மாகாணம் கக்கூர் பகுதியில் நேற்று நடந்த பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சரும், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவருமான பிலாவல் பூட்டோ இந்தியாவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
பிலாவல் பூட்டோ பேசியதாவது,
“சிந்து நதி பாகிஸ்தானுடையது. அது எப்போதும் பாகிஸ்தானுடையதாகவே இருக்கும். சிந்து நதிக்கும், சிந்து மக்களுக்கும் இடையேயான பல்லாண்டுகால பிணைப்பை மோடியால் பிரிக்க முடியாது. இந்திய அரசாங்கம் பாகிஸ்தானின் நீர் மீது கண் வைத்துள்ளது. மோடியின் போர் வெறியையோ, சிந்து நதி நீரை பாகிஸ்தானில் இருந்து திருப்பி விடுவதற்கான எந்தவொரு முயற்சியையோ பாகிஸ்தான் மக்களோ அல்லது சர்வதேச அமைப்புகளோ பொறுத்து கொள்ளாது.
சிந்து நதியில் கொள்ளை ஏற்று கொள்ளப்படாது என்ற செய்தியை உலகுக்கு நாங்கள் அனுப்புவோம். சிந்து நதியில் எங்கள்(பாகிஸ்தான்) நீர் பாயும் அல்லது அவர்களின்(இந்தியர்கள்) ரத்தம் ஓடும்” என பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். இவர் பாக். முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ, தற்போதைய பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தம்பதியின் மகன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post ஒப்பந்தம் நிறுத்தப்பட்டு தண்ணீர் வராவிட்டால் சிந்து நதியில் இந்தியர்களின் ரத்தம் ஓடும்: பாக். அதிபர் மகன் பகிரங்க மிரட்டல் appeared first on Dinakaran.