சென்னை: இந்து சமய அறநிலையத் துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருகால பூஜை திட்டத்தில் உள்ள கோயில்களுக்கு ரூ.110 கோடி வைப்பு நிதிக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும், விரிவுபடுத்தப்பட்ட 1,000 ஒருகால பூஜைத் திட்ட திருக்கோயில்களுக்கு அதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 அர்ச்சகர்களிடம் ஆணைகளை வழங்குகினார். பள்ளிக் கல்வித் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி மாநகரில் 290 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத்தரத்துடன் கட்டப்படவுள்ள மாபெரும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
The post ஒருகால பூஜை திட்டத்தில் உள்ள கோயில்களுக்கு ரூ.110 கோடி வைப்பு நிதிக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். appeared first on Dinakaran.