சென்னை: பிசிசிஐ சார்பில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் வரும் 17-ம் முதல் 27-ம் தேதி வரை திருவனந்தபுரத்தில் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்கும் தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ஆர்.வில்மல்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ஏ.பத்ரிநாத் செயல்பட உள்ளார்.
அணி விவரம்: ஆர்.விமல் குமார் (கேப்டன்), ஏ.பத்ரிநாத், ஷன்னி சாந்து, வி.எஸ்.கார்த்திக் மணிகண்டன், ஜி.அஜிதேஷ், எஸ்.ஆர்.ஆதிஷ், எஸ்.ரித்திக் ஈஸ்வரன், கே.டி.ஏ.மாதவ பிரசாத், எஸ்.லக்சய் ஜெயின், மானவ் பராக், ஜி.கோவிந்த், ஹெச்.பிரசித் ஆகாஷ், எஸ்.செல்வ கணபதி, பி.விக்னேஷ், சச்சின் ரதி.