ரஷ்யாவில் திங்கட்கிழமை காலை செய்தித்தாள்களில் பிரதானமாக இடம்பெற்ற படம்- ரஷ்ய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் ரியாத்தில் பேச்சுவார்த்தை மேஜையில் அமர்ந்திருந்த காட்சிதான். யுக்ரேன் யுத்தத்திற்காக ரஷ்யாவை தனிமைப்படுத்தும் மேற்கத்திய நாடுகளின் முயற்சி தோல்வியடைந்துவிட்டது என்பதை ரஷ்ய மக்களும், சர்வதேச சமுதாயமும் காணவேண்டும் என ரஷ்யா விரும்புகிறது.