மதுரை: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைமைமருத்துவமனைகளிலும் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி ஏற்படுத்தவேண்டும் என 2017-ல் பொதுநல வழக்கு ஒன்றில் மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனாலும், அனைத்து அரசுமருத்துவமனைகளிலும் சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் வசதிஇதுவரை ஏற்படுத்தப்படவில்லை.
அரசு மருத்துவமனைகளில் சிடி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரங்களை நிறுவி, அவற்றைச் செயல்படுத்தும் பணிகளை தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் நிர்வகித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் இதுவரை 133 சிடி ஸ்கேன், 42 எம்ஆர்ஐ ஸ்கேன்கள் நிறுவப்பட்டுள்ளன. சிடி ஸ்கேன் எடுக்க ரூ.500, எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க ரூ.2,500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மக்கள் இந்த இருஸ்கேன்களையும் மருத்துவக்காப்பீடு மூலம் எடுக்க நடைமுறைச் சிக்கல் உள்ளதால், பலரும் பணம் செலுத்தியே ஸ்கேன் எடுக்கின்றனர்.