சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று (செப்., 29) ஒரே நாளில் இரண்டு முறை அதிகரித்துள்ளது. அதாவது, காலை பவுனுக்கு ரூ.480 அதிகரித்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக, பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு பவுன் ரூ.86,160-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் வரலாறு காணாத உச்சத்தை அடைந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று காலை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,700-க்கு விற்பனை ஆனது. பவுனுக்கு ரூ.480 உயர்ந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.85,600-க்கு விற்பனையானது.