சென்னை: ஒரே வேலை, ஒரே ஊதியம் கோட்பாட்டின்படி எய்ம்ஸ்-க்கு இணையாக அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடுமாறு தேசிய மருத்துவ ஆணையத்துக்கு அரசு மருத்துவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
இதுதொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை கூறியதாவது: நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு உரிய உதவித்தொகை தரப்பட வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியது. இதையடுத்து, சட்டப்போராட்டக் குழு தேசிய மருத்துவ ஆணையத்துக்கு கோரிக்கை மனு ஒன்றை கடந்த ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி அனுப்பியது.