திரைப்படங்களுக்கு இசை அமைத்து வரும் இளையராஜா, வெளிநாடுகள் மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
கடந்த இரு தினங்களுக்கு முன் திருநெல்வேலியில் அவர் நடத்திய இசை நிகழ்ச்சி, வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் உற்சாகம் அடைந்துள்ள அவர், ஒவ்வொரு ஊரிலும் தனது இசை நிகழ்ச்சி நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.