ஒவ்வொரு மழை துளியையும் சேமியுங்கள் என்று மனதின் குரலில் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையான நேற்று 120-வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி ஒலிபரப்பானது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பொதுத் தேர்வு, ஆண்டு இறுதித் தேர்வுகள் நிறைவடைந்து கோடை விடுமுறை காலம் தொடங்க இருக்கிறது. இந்த கோடை விடுமுறை நாட்களில் ஏதாவது ஆக்கப்பூர்வமானதை செய்ய வேண்டும். நம்முடைய திறன்களை மேலும் கூர்மைப்படுத்த வேண்டும்.