ஓடிடியில் மார்ச் 28-ம் தேதி ‘அகத்தியா’ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 28-ம் தேதி வெளியான படம் ‘அகத்தியா’. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் தோல்வியை தழுவியது.
தற்போது இப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் மார்ச் 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான படங்களில், பெரும் நஷ்டத்தினை ஏற்படுத்திய படம் ‘அகத்தியா’ என்பது குறிப்பிடத்தக்கது.