சென்னை: ‘ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் மூலம் தமிழகம் முழுவதும் 1 கோடியே 35 லட்சத்து 43,103 பேர் இணைந்துள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அப்போது அவர் வாக்குச்சாவடிக்கு 30 சதவீதம் உறுப்பினர்களை திமுகவில் சேர்க்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, இதற்காக செயலியும் உருவாக்கப்பட்டது. அதன்பின், ஜூலை 1-ம் தேதி இத்திட்டத்தை அறிவித்த முதல்வர் ஸ்டாலின், ஜூலை 3-ம் தேதி சென்னை, ஆழ்வார்பேட்டையில் மக்களை நேரடியாக சந்தித்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கடந்த ஜூலை 10-ம் தேதி திருவாரூர் தொகுதிக்குட்பட்ட சன்னதி தெருவில் முதல்வர், மக்களை நேரடியாக சந்தித்து, இத்திட்டத்தில் உறுப்பினர்களை சேர்த்தார்.