சென்னை: “கச்சத்தீவு மீதான இந்தியாவின் உரிமையை காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்து இலங்கைக்கு விட்டுக் கொடுத்த கட்சி திமுக. கச்சத்தீவு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் கபட நாடகம் ஆடுகிறார்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சீர்குலைந்து கிடக்கும் சட்டம் – ஒழுங்கு, குழந்தைகள், பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகள், அதிகரித்து வரும் பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்முறைகள் என தமிழகம் இதுவரை இல்லாத மோசமான இருண்ட காலத்தில் இருக்கும்போது, நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு என்று நாடகமாடிக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அவரது இன்றைய நாடகம், கச்சத்தீவு மீட்புத் தீர்மானம்.