ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை தீவிரப்படுத்தியதால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ரஷ்ய எண்ணெய் கப்பல்கள் மீதும் புதிய தடைகளை அமெரிக்கா விதித்துள்ளதால் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறைந்த விலையில் கிடைத்த ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு மாற்றாக, வளைகுடா நாடுகளில் இருந்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஞாயிறு அன்று ஒரு பீப்பாய் 79.76 டாலராக இருந்த பிரென்ட் கச்சா எண்ணெய் 1.57 டாலர் உயர்ந்து 81.33 டாலராக உயர்ந்துள்ளது. நியூயார்க் சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 1.60 டாலர் அதிகரித்து 78.17 டாலர்களாக அதிகரித்துள்ளது.
The post கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு..!! appeared first on Dinakaran.