கடத்தூர் : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடத்தூர் வாரச்சந்தையில் நேற்று கால்நடைகளுக்கான பொங்கல் அலங்கார பொருட்கள் விற்பனை களைகட்டயது.
தர்மபுரி மாவட்டம், கடத்தூரில் வாரந்தோறும் சந்தை நடைபெறுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று கால்நடைகளை அலங்கரிக்கும் பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.
தவிர கடத்தூர் கடைவீதி, சாலையோரம் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு கால்நடைகளை அலங்கரிக்க கண்களை கவரும் வகையில் பல வண்ணங்களில் நூல் கயிறுகள், கொம்பு கயிறுகள், திருஷ்டி கயிறு, சங்கு, குஞ்சங்கள், மூக்கணாங்கயிறு, கழுத்தில் அணியும் பலவகை மணிகள், சலங்கைகள், குப்பி, பட்டை சங்கிலி, ஜங்கு பட்டை, வண்ணப்பூச்சுகள், கள்ள பூட்டு, வாயப்பட்டி, சாட்டை ஆகிய அலங்கார பொருட்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டது. மாட்டு பொங்கலுக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில், கால்நடைகளுக்கான அலங்கார பொருட்கள் விற்பனை களைகட்டியது.
The post கடத்தூர் வாரச்சந்தையில் கால்நடைகளுக்கான அலங்கார பொருட்கள் விற்பனை ஜோர் appeared first on Dinakaran.