சென்னை: நாட்டின் முன்னணி வங்கிசாரா நிதி நிறுவனங்களில் ஒன்றான எல் அண்ட் டி பைனான்ஸ், 2024-25நிதியாண்டில், வரிக்குப் பிந்தைய லாபமாக ரூ.2,644 கோடியை ஈட்டியுள்ளது. இது, இதுவரை இல்லாத உயர்வு ஆகும்.
மேலும், முந்தைய ஆண்டைவிட 14% வளர்ச்சி ஆகும். மார்ச் 31, 2025 உடன் முடிந்த 4-வது காலாண்டில் இந்நிறுவனம் ரூ.636 கோடியை வரிக்குப் பிந்தைய லாபமாக ஈட்டியிருக்கிறது. இது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 15% அதிகம் ஆகும்.