மும்பை: பங்குச் சந்தையில் கடந்த 7 மாதங்களில் முதன்முறையாக நேற்றைய வர்த்தகத்தில் நிப்டி 25,000 புள்ளிகளை கடந்து நிலைபெற்றது. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்பதற்றம் தணிந்த பிறகு பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை பதிவு செய்து வருகின்றன.
அந்த வகையில், நேற்றைய வர்த்தகத்தில் தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி 395 புள்ளிகள் அதிகரி்த்து கடந்த 7 மாதங்களில் இல்லாத வகையில் 25,062 புள்ளிகளில் நிலைபெற்றது. அதேபோன்று மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் தொடர்ந்து இரண்டாவது நாளாக நல்ல முன்னேற்றம் கண்டு 1,200 புள்ளிகள் அதிகரி்த்து 82,530 புள்ளிகளில் நிலைகொண்டது. சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள 30 முன்னணி நிறுவனப் பங்குகளில் 29 பங்குகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன.