பெங்களூரு: கர்நாடகாவின் தாவணகெரே மாவட்டத்தில் உள்ள‌ நியாமதி டவுனில் பாரத ஸ்டேட் வங்கி உள்ளது. க‌டந்த ஆண்டு இந்த வங்கியில் ரூ.13 கோடி மதிப்பிலான 17.7 கிலோ எடையுள்ள தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களையும் திருடிச் சென்றனர். இதனால் குற்றவாளிகளை உடனடியாக கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனிடையே நியாமதி டவுனை சேர்ந்த உள்ளூர் குற்றவாளிகளையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது உள்ளூரை சேர்ந்த சிலர் அதில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. வங்கி கொள்ளை சம்பவம் நடந்த தினத்தில் இருந்து நியாமதியில் இருந்த ஐயங்கார் பேக்கிரி மூடப்பட்டு கிடந்ததால், போலீஸார் சந்தேகம் அடைந்தனர்.