கடற்கரை – எழும்பூர் இடையே புதியதாக அமைக்கப்பட்டுள்ள 4-வது ரயில் பாதையில் ஆய்வு நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இன்று அதிகாலை முதல் மாலை வரை மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை எழும்பூர் – கடற்கரை இடையே 4-வது ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்து, ஆய்வு மற்றும் சோதனை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, கடற்கரை – தாம்பரம் இடையே 9-ம் தேதி (ஞாயிறு) அதிகாலை 5.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன. இதற்கு மாற்றாக, தாம்பரம் – கோடம்பாக்கம் இடையே 30 நிமிடத்துக்கு ஒரு பாசஞ்சர் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.