கடலூர்: கடலூர் அருகே கடலில் மிதந்து வந்த மர்ம பொருளைக் கைப்பற்றி கடலோர காவல் படையினர் ஆய்வு செய்தனர்.
கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே சாமியார்பேட்டை கடற்கரைக்கும் வேலங்கிராயன் பேட்டை கடற்கரைக்கும் இடையே கடலில் இன்று ( மார்ச்.24) காலை பெரிய அளவிலான மர்மப் பொருள் ஒன்று மிதந்து வந்தது. இதனைப் பார்த்த மீனவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் இது குறித்து மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தந்தனர்.