கடலூர்: ‘யார் அந்த சார்?’ என்ற பேட்ச் அணிந்து வந்த அதிமுக மாமன்ற உறுப்பினர்களை 5 பேரை இரு கூட்டங்களுக்கு சஸ்பெண்ட் செய்து கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா உத்தரவிட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விவகாரம் சட்டப்பேரவையிலும் எதிரொலித்த நிலையில், ‘யார் அந்த சார்?’ என கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள், அதற்கான ஆதாரம் இருந்தால் விசாரணை குழுவுடன் தெரிவிக்கலாம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.