கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கடந்த 12.4.2025 ம் தேதி இரவு கடலூர் முதுநகர், கடலூர் புதுநகர், திருப்பாதிரிப்புலியூர், நெல்லிக்குப்பம் பகுதிகளில் இரவு நேரத்தில் பூட்டி இருந்த கடைகளில் பூட்டை உடைத்து கடையில் இருந்த பணத்தை திருடி கொண்டும், வீட்டில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனங்கள் திருட்டு போனது சம்பந்தமாக காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்களின் உத்தரவின்பேரில், கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் M. S. ரூபன்குமார், பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் P. N. ராஜா ஆகியோர்களின் மேற்பார்வையில் கடலூர் முதுநகர் காவல் ஆய்வாளர் ரேவதி, உதவி ஆய்வாளர் கணபதி, தனிப்படை உதவி ஆய்வாளர்கள் தங்கவேலு, ஆனந்தகுமார். ஆகியோர்கள் தலைமையில் குற்றவாளிகளை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
திருட்டு வழக்கு குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பொருட்டு காரைக்காடு அங்காளம்மன் கோயில் அருகே வாகன தணிக்கை மேற்கொண்டு இருந்த போது வேகமாக வந்த 2 மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி TN31BK0789 பஜாஜ் பல்சர் வாகனத்தில் வந்தவர்களை மடக்கி பிடித்தும் விசாரணை மேற்கொண்டபோது மணிகண்டன் வயது 37, த/பெ கோவிந்தன், மாரியம்மன் கோவில் தெரு. S.மலையனூர், இளவரசனார்கோட்டை, அய்யனார் வயது 20, த/பெ சங்கர். முருகன் கோவில் தெரு, பாஷாரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி மாவட்டம் என்பதும்,
TN19AU5677 KTM Bike வாகனத்தில் வந்தவர்கள் வாகனத்தை விட்டு விட்டு தப்பி ஓடி சென்று 10 அடி பள்ளம் கொண்ட செம்மண் குவாரியில் கீழே விழுந்தவர்கள் மடக்கி பிடித்துபோது அருள் வயது 22, த/பெ முருகன், மேற்குதெரு, பாஷாரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி மாவட்டம், என்பவருக்கு வலது கையில் காயம் ஏற்பட்டும், ஐயப்பன் வயது 24, த/பெ கோவிந்தன், மாரியம்மன் கோவில் தெரு, S.மலையனூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் என்பவருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டு கிடந்தவர்களை பிடித்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருடியதாக ஒப்புக்கொண்டனர். மேலும் கடந்த 12.04.2025 தேதி இரவு கடலூர் புதுப்பாளையம், திருப்பாதிரிப்புலியூர், கடலூர் முதுநகர், ஆகிய 08 இடங்களில் கடைகளில் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்றதாகவும் மேலும் கடலூர், கோயம்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு, சேலம் ஆகிய மாவட்டங்களில் மோட்டார் சைக்களில்கள் திருடியதாக கூறியவர்களை விசாரணை மேற்கொண்டு அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள்கள் 16, பணம் ரூபாய் 1000, லேப்டாப் 01, பூட்டை உடைக்கும் இரும்பு ராடுகள் 02, ஹெல்மட் 04, ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே நாள் இரவில் கடலூர் மாவட்டத்தில் 08 கடைகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் திருடிய குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினரை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் பாராட்டினார்.
The post கடலூர் மாவட்டத்தில் பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் திருடிய குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினரை பாராட்டினார் காவல் கண்காணிப்பாளர் appeared first on Dinakaran.