சென்னை: சென்னை கடலோரப் பகுதிகளில் கடல் ஆமைகள் அதிகளவில் இறந்த நிலையில் கரை ஒதுங்க காரணம் என்ன? என தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மீனவர்கள் பயன்படுத்தும் ஒரு குறிப்பிட்ட வலைதான் கடல் ஆமைகள் உயிரிழக்க காரணமா?” எனவும் பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது. மெரினா முதல் கோவளம் வரை கடலோரப் பகுதியில் ஆமைகள் இறந்து ஒதுங்குவது தொடர்பாக, பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.
The post கடல் ஆமைகள் அதிகளவில் இறந்து கரை ஒதுங்க என்ன காரணம்?: தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க தீர்ப்பாயம் உத்தரவு appeared first on Dinakaran.