கன்னியாகுமரி: நாட்டின் கடல் வழி பாதுகாப்பை உறுதி செய்ய 6 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை இன்று கடலோரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இந்த ஒத்திகையை கடலோர காவல் படை, கடலோர பாதுகாப்பு குழும போலீசார், காவல்துறை ஆகிய துறைகள் இணைந்து நடத்துகின்றன. ஒத்திகையின் முதல் நோக்கம் கடல் வழியே ஊடுருவ முயற்சிக்கும் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பது மற்றும் கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்துவது ஆகும்.
இந்த ஒத்திகையின் போது கடல் வழியே ஊடுருவ முயற்சிக்கும் தீவிரவாதிகளை போன்று சில குழுக்கள் செயல்படும். கடலோரப் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள படைகள் இந்த ஊடுருவல்களைக் கண்டறிந்து தடுத்து நிறுத்தி அவர்களை பிடிப்பது எப்படி போன்ற பயிற்சிகளை மேற்கொள்வர். கடலில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் நடமாட்டத்தை கண்டறிந்து விரைந்து செயல்படும் திறனை மதிப்பிடுவது ஒத்திகையின் ஒரு பகுதியாக உள்ளது.
இந்த ஒத்திகையின்போது, கடலோரப் பகுதி மக்கள் மற்றும் மீனவர்கள் பாதுகாப்புப் படையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கடலில் சந்தேகத்திற்கிடமான படகைள் அல்லது நபர்களைக் கண்டால், உடனடியாகக் கடலோரக் காவல் படை அல்லது காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.
கன்னியாகுமரியில் ஆரோக்கியபுரம் முதல் நிரோடி வரையிலான 48 மீனவ கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அதிநவீன படகுளில் சென்று பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். இன்றும் நாளையும் நடைபெறும் கடல் பாதுகாப்புயில், கடவோர பாதுகாப்பு குழம ஆய்வாளர் சாந்தி தலைமையில் இரண்டு குழுக்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post கடல் வழி பாதுகாப்பை உறுதி செய்ய 6 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை..!! appeared first on Dinakaran.