துபாய்: ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் அலி ரசினி, முகமது மொகிசே ஆகிய நீதிபதிகள் நேற்று தங்கள் அறையில் ஓய்வெடுத்து கொண்டிருந்தனர். அப்போது நீதிமன்ற வளாகத்துக்குள் புகுந்த மர்ம நபர், 2 நீதிபதிகளையும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் சரிந்து பலியாகினர். பின்னர் அந்த மர்ம நபர் தன்னைதானே சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
சுட்டு கொல்லப்பட்ட இரண்டு நீதிபதிகளும் தீவிர அடிப்படைவாத கொள்கை கொண்டவர்கள், சமூக ஆர்வலர்கள், போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான மரண தண்டனை விதித்தவர்கள் என கூறப்படுகிறது. அதிர்ச்சியளிக்கும் இந்த கொலை குற்றத்தை செய்த மர்ம நபர் மீது எந்த நீதிமன்றத்திலும் எந்த வழக்குகளும் இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இருந்தும் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
The post கடுமையான மரண தண்டனைகளை விதித்தவர்கள் ஈரான் உச்ச நீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் சுட்டு கொலை: மர்ம நபரும் தற்கொலை appeared first on Dinakaran.