விழுப்புரம்: விசிக பொதுச் செயலாளரும் விழுப்புரம் எம்பியுமான ரவிக்குமார் நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில் விஜய்யை கடுமையாக விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டுள்ளார். ‘அரசியல் ஒப்பனையின் ஆயுள்’ என்ற தலைப்பில் விஜய்- திருமாவளவனை வைத்து அரசியல் சாயம் பூசியது யார்? என்பது பற்றி அந்த பதிவில் கூறியிருப்பதாவது: திருமாவளவன் விரிவாக அறிக்கை கொடுத்த பிறகும்கூட விஜய் எங்கள் தலைவரைப் பற்றிப் பேசியதைப் பார்த்தால் அவர் கட்சி ஆரம்பித்திருப்பதே விடுதலைச் சிறுத்தைகளோடு எப்படியாவது கூட்டணி சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காகத்தானோ? என எண்ணத் தோன்றுகிறது.
தன்னம்பிக்கையோடு கட்சி ஆரம்பித்திருந்தால் இப்படி வலிந்து வலிந்து ‘அழைப்பு’ விடுக்கும் நிலை ஏற்பட்டிருக்காது. இதையெல்லாம் பார்க்கும் எவரும், ரஜினிகாந்த் அவர்களை கட்சி ஆரம்பிக்கச் சொன்னவர்கள் தான், அவர் உடன்படாததால் விஜய்யை கட்சி தொடங்க வைத்திருக்கிறார்கள் என்பதை எளிதாகப் புரிந்து கொள்வார்கள். திரைப்பட ஒப்பனை அளவுக்குக்கூட அரசியல் ஒப்பனைக்கு ஆயுள் கிடையாது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post கட்சி தொடங்கியதே விசிகவுடன் கூட்டணி வைக்கவா? விஜய்க்கு தன்னம்பிக்கை கிடையாது: ரவிக்குமார் எம்பி கடும் தாக்கு appeared first on Dinakaran.