சென்னை: கட்சியின் ரகசியங்களை புஸ்ஸி ஆனந்த் வெளியே கசிய விடுகிறார் என தவெக வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி குற்றச்சாட்டு வைத்துள்ளார். தமிழக வெற்றிக்கு கழகத்தின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி. இவர் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் செயல்பாடுகளை கண்டித்து பேசிய அதிர்ச்சி ஆடியோ வெளியாகியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு தனது வியூகத்தின் வாயிலாக மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற வாதத்தை முன்வைத்து, அன்புமணியின் பெயரை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்ததில் ஜான் ஆரோக்கியசாமிக்கு முக்கிய பங்கு உண்டு.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஜான் ஆரோக்கியசாமியின் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது மீண்டும் புஸ்ஸி ஆனந்த் குறித்தான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில், கட்சியின் ரகசியங்களை புஸ்ஸி ஆனந்த் வெளியே கசிய விடுகிறார் புஸ்ஸி ஆனந்துக்கு புதுச்சேரி முதல்வராகும் விருப்பம் இருக்கிறது. சில நேரங்களில் புஸ்ஸி ஆனந்த் கட்சிக்காக பணியாற்றுவது போன்று காண்பித்துக் கொள்கிறார், சில நேரத்தில் சுயநலமாக பணியாற்றுகிறார் என்று அந்த ஆடியோவில் பதிவாகியுள்ளது. இந்த ஆடியோ விவகாரம் தமிழக வெற்றிக் கழகத்தை மட்டுமின்றி மற்றக் கட்சியினரிடையேயும் பேசுபொருளாகியுள்ளது.
The post கட்சி ரகசியங்களை புஸ்ஸி ஆனந்த் வெளியே கசிய விடுகிறார்: தவெக வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.