புதுக்கோட்டை: கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை ஆட்சியரை சந்தித்து கட்டட பொறியாளர் சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். மாவட்டத்தில் பிப்ரவரி.15 முதல் கட்டுமான பொருட்கள் யூனிட் ஒன்றுக்கு ரூ.1,000 வரை விலையேற்றம் செய்யப்பட்டுள்ளன என மனு அளித்தனர். மாவட்டத்தில் எம்சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் திடீர் விலை உயர்வால் கட்டுமான பணிகள் பாதிப்படைந்துள்ளது என்றும் தெரிவித்தனர்.
The post கட்டுமான பொருள் விலை உயர்வு: ஆட்சியரிடம் மனு appeared first on Dinakaran.