புதுடெல்லி: இந்தியாவில் கடலுக்குள் அமைக்கப்படும் கண்ணாடியிழை கேபிள் கட்டமைப்பில் சர்வதேச நிறுவனங்களான கூகுள் மற்றும் மெட்டா ஆகியவை அதிகளவில் முதலீடு செய்கின்றன. இதனால் இங்கு ஏற்கெனவே டேட்டா சேவைகளை வழங்கும் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் டாடா கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் நேரடி போட்டி நிலவும் எனத் தெரிகிறது.
அடுத்தாண்டின் முதல் காலாண்டில் கூகுள் நிறுவனம் மும்பையில் ப்ளு-ராமன் சப்மெரின் கேபிள் சிஸ்டம் என்ற தகவல் தொடர்பு இணைப்பை தொடங்கவுள்ளது. 218 டிபிபிஎஸ் திறனுள்ள இந்த இணைப்பு திட்டத்தின் மதிப்பு 400 மில்லியன் டாலர். இதில் இத்தாலியின் ஸ்பார்கிள் நிறுவனமும் முதலீடு செய்கிறது.