கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இப்போது அடுத்த புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் நாட்டின் பிரதமர் பதவியில் நீடிப்பார்.
அதாவது, அவரது கட்சி பொதுத் தேர்தலுக்குச் செல்வதற்கு முன்பு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஆனால், தேர்தல் தொடர்பாக வரும் கருத்துக் கணிப்புகளில் அவரது கட்சி தோல்வியை நோக்கிச் செல்வதாக முடிவுகள் தெரிவிக்கின்றன.