கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகல் அறிவிப்பைத் தொடர்ந்து, இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவருமான அனிதா ஆனந்த், அந்நாட்டின் அடுத்த பிரதமராக பதவியேற்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லிபரல் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்ய அந்தக் கட்சி முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பாக லிபரல் கட்சி தொண்டர்களிடையே விரைவில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதில் அதிக வாக்குகள் பெறுபவர் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். அவரே கனடாவின் புதிய பிரதமராகவும் பதவியேற்பார். இப்போதைய சூழலில் கனடா போக்குவரத்துத் துறை அமைச்சரும் லிபரல் கட்சியின் மூத்த தலைவருமான அனிதா ஆனந்த் முன்னணியில் உள்ளார். இவரது தந்தை ஆனந்த், தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவர். தாய் சரோஜ் ராம் பஞ்சாபை சேர்ந்தவர் ஆவர்.