சென்னை: திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான கனிமொழி நேற்று தனது 57-வதுபிறந்த நாளைக் கொண்டாடினார். முன்னதாக தாய் ராஜாத்தி அம்மாளிடம் வாழ்த்து பெற்ற அவர், பின்னர் தனது சகோதரரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை, தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதையடுத்து, மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரது நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ஆழ்வார்பேட்டை இல்லத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் வாழ்த்துகளை பெற்றார்.