வாஷிங்டன்: அமெரிக்காவின் ரோட் தீவில் பிறந்தவர் பிராங்க் கேப்ரியோ. பின்னர் படிப்பு முடித்து கடந்த 40 ஆண்டுகளாக ரோட் தீவின் முனிசிபல் நீதிபதியாக பணியாற்றினார். பெரும்பாலும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பான வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கி வந்தார்.
ஒரு கட்டத்தில் இவரது அணுகுமுறை அனைவரையும் கவர்ந்தது. போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள். அப்போது அவர்களிடம் நீதிபதி பிராங்க் கேப்ரியோ விசாரணை நடத்தும் விதமே தனித்துவமாக இருக்கும்.