கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இவற்றை பார்வையிட பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு சேவையை நடத்தி வருகிறது.
கடந்த மாதம் 30ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே அமைக்கப்பட்ட கண்ணாடி இழை கூண்டு பாலத்தை திறந்து வைத்தார்.
இதனையடுத்து சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சென்று அங்கிருந்து கண்ணாடி இழை பாலம் வழியாக நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை கண்டு ரசித்து வந்தனர். நேற்று முதல் கண்ணாடி இழை கூண்டு பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகள் பாலம் வழியாக செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
The post கன்னியாகுமரியில் கடல் நடுவே கண்ணாடி பாலத்தில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை appeared first on Dinakaran.