கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இவற்றை தினமும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவெளியின்றி நடத்தி வருகிறது.
இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை மற்றும் சபரிமலை மகர விளக்கு பூஜையையொட்டி அதிகளவில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வருகின்றனர். இதையொட்டி விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை கண்டுகளித்து செல்ல வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம், நாளை மற்றும் 17ம்தேதி ஆகிய 3 நாட்கள் படகு சேவை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இடைவேளையின்றி இயக்கப்படுகிறது என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
The post கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து நேரம் நீட்டிப்பு appeared first on Dinakaran.