சென்னை: தமிழக சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி பேசுகையில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டக் கல்லூரி துவக்க அரசு முன்வருமா’’ என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் ரகுபதி கூறுகையில், “இன்று உயர் நீதிமன்றம் உச்சநீதிமன்றத்தினுடைய நீதிபதி கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகம் உள்ளனர். அதிலும் இன்று சென்னையிலும், மதுரையிலும் இரண்டு பெண் நீதிபதிகள் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்.
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியும் நம்முடைய கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் தான். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எப்படியும் படித்து முன்னேறி விடுவார்கள் எந்த விதமான கவலையும் கிடையாது. எந்த இடத்தில் பார்த்தாலும் அங்கே கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் தான் இருக்கிறார். படித்தவர்களாக வேலைவாய்ப்பு எங்களுக்கு இடம் வேண்டும் என்று கேட்டு அங்கே வாங்கி, அதற்கு பிறகு கன்னியாகுமரி கேட்பது தான் இன்று கஷ்டமான ஒன்று.
திருநெல்வேலியில் ஒரு அரசு சட்ட கல்லூரி உள்ளது. அதேபோல கன்னியாகுமரியில் ஒரு தனியார் சட்டக் கல்லூரி உள்ளது. அங்கு கட்டணம் அதிகம் என்று சொன்னீர்கள். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு சட்டக் கல்லூரி கொள்கையளவில் இருக்கிறதே தவிர. அதை நிறைவேற்ற இயலாத சூழலில் இருக்கிறோம். நிதிநிலைமை சரியானால் நிச்சயமாக எல்லா மாவட்டங்களுக்கும் சட்டக் கல்லூரி கொண்டு வரவேண்டும் என்பது தான் முதலமைச்சரின் விருப்பம்” என்றார்.
The post கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எப்படியும் படித்து முன்னேறி விடுவார்கள் கவலை இல்லை: பாஜக எம்ஆர்.காந்திக்கு அமைச்சர் ரகுபதி பதில் appeared first on Dinakaran.