ஆலந்தூர்: உள்ளகரம் பெரியார் தெருவை சேர்ந்தவர் நரசிம்மன். கால்நடை விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர். இவர், குஜராத்தில் இருந்து ஒரு பசு மாட்டை வாங்கி வளர்த்து வந்தார். நிறைமாத கர்ப்பமாக இருந்த அந்த பசுமாடு நேற்று பிரசவிக்க சிரமப்பட்டது. நீண்ட நேரம் கழித்து கன்றை ஈன்றபோது, பசுவின் குடல் பகுதியும் கீழே சரிந்து விழுந்தது.
இதனால் பசுமாடு கீழே விழுந்து உயிருக்காக போராடியது. இதனை அறியாத கன்றுகுட்டி தட்டு தடுமாறி பால் குடிப்பதற்காக மடியை தேடியதும், பின்னர் தாய் முகத்தின் அருகே வந்து செல்வதும் பார்ப்போரின் கண்களை கலங்க செய்தது. உடனே, நரசிம்மன் விலங்குகளுக்கான அவசர ஊர்த்தி 1962 ஆம்புலன்ஸ்சுக்கு தொடர்பு கொண்டார். ஆனால், நீண்ட நேரமாக அந்த வாகனம் வராததால், பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது.
The post கன்று ஈன்றபோது குடல் சரிந்ததால் பசு உயிரிழப்பு appeared first on Dinakaran.