மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டராக இருந்தவர் யுவராஜ் சிங். இவரது தந்தை யோக்ராஜ் சிங்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர்தான். இந்திய அணிக்காக விளையாடியவர்.
இந்நிலையில் யோக்ராஜ் சிங் நேற்று கூறியதாவது: கபில்தேவ் இந்திய அணியின் கேப்டனாக இருந்த அதே நேரத்தில் வடக்கு மண்டலம், ஹரியானா அணியின் கேப்டனாகவும் அவர் இருந்தார். அப்போது எந்தவித காரணமும் இல்லாமல் அணியில் இருந்து என்னை நீக்கினார். இதையடுத்து கபில்தேவுக்கு நான் பாடம் கற்பிப்பேன் என்று எனது மனைவியிடம் கூறினேன். உடனடியாக என் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு கபில்தேவ் வீட்டுக்கு சென்றேன். அப்போது கபில், அவரது அம்மாவுடன் வெளியே வந்தார்.