சென்னை: துறைமுகங்களுக்கு கப்பல் வருவதற்கு வழி காட்டும் மிதவை சென்னை மெரினா கடற்கரையில் கரை ஒதுங்கியது. இதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சூறாவளி புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், சென்னையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக, திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு ஆகிய பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.