பேங்காக்: கம்போடிய செனட் தலைவர் ஹன் சென் உடன் தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா நடத்திய தொலைபேசி உரையாடல் கசிந்ததை அடுத்து, அரசியலமைப்பு நீதிமன்றம் அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது.
அண்டை நாடுகளான தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே ஏற்பட்ட எல்லை தகராறு காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது. இரு நாட்டு ராணுவமும் தாக்குதலில் ஈடுபட்டன. இந்நிலையில், பதட்டத்தை தணிக்கும் நோக்கில், கம்போடிய முன்னாள் பிரதமரும் அந்நாட்டின் செனட் தலைவருமான ஹன் சென் உடன், தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா தொலைபேசியில் உரையாடினார்.